ஆத்திசூடி - Aathichoodi

ஔவையார்

ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திச்சூடி.

Aathichoodi is a book of justice written by Auvaiyar who lived in the 12th century. Aathichoodi is simply set up with short phrases that the kids can learn and memorize at a young age.

தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள், குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப்படுகிற கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்தி சூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

In recognition of the importance of morality in the Tamil community, the teachers have been adhering to the teachings of Aathichoodi in order to teach the Tamil alphabet while learning Tamil, from the then-established boarding schools(Gurukuls) to the present day education system.

கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

Let us glorify the Super Energy that people of renown fantasy.
ஆத்தி மலர்களை சூடிய சிவபெருமான் விரும்பும் விநாயகக் கடவுளை நாம் எப்போதும் துதித்து வணங்குவோம்.

உயிர் வருக்கம்

1 அறஞ் செய விரும்பு
Desire doing righteous deeds
அறம் செய விரும்பு

உயிர் வருக்கம்

2 ஆறுவது சினம்
Anger is to be calmed down (controlled)
ஆத்திரம் ஆற்றுக. கோபம் தணியும் தன்மையுடையது, கோபத்தை ஆற்றுப்படுத்துக.

உயிர் வருக்கம்

3 இயல்வது கரவேல்
Perform abilities upon need; don’t conceal them
இயன்றவற்றை மறைக்காதே

உயிர் வருக்கம்

4 ஈவது விலக்கேல்
Never prevent others from providing charity
ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதை தடுக்காதே.

உயிர் வருக்கம்

5 உடையது விளம்பேல்
Never proclaim/boast about what you have (your accomplishments)
தற்பெருமை கூடாது

உயிர் வருக்கம்

6 ஊக்கமது கைவிடேல்
Never give up confidence and hope
உற்சாகத்தை (தன்னம்பிக்கை/ விடாமுயற்சி) இழக்காதே

உயிர் வருக்கம்

7 எண் எழுத்து இகழேல்
Never despise/ avoid learning on mathematical science and literature
கணித அறிவியல், இலக்கியம் தூற்றாதே

உயிர் வருக்கம்

8 ஏற்பது இகழ்ச்சி
Accepting alms (begging) is despicable
இரப்பதை (இர - கெஞ்சுவது) தூற்று (இகழ்)

உயிர் வருக்கம்

9 ஐயமிட்டு உண்
Share your food with the needy, before you eat
யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்

உயிர் வருக்கம்

10 ஒப்புர வொழுகு
Act virtuously
உலகத்தோடு ஒத்து வாழ்.

உயிர் வருக்கம்

11 ஓதுவது ஒழியேல்
Learning is a life long process
ஒருபோதும் படிக்கும் பழக்கத்தை கை விடாதே.

ஒள
உயிர் வருக்கம்

12 ஒளவியம் பேசேல்
Never speak with jealousy and envy
பொறாமை வார்த்தைகளை பேசாதே.

உயிர் வருக்கம்

13 அஃகஞ் சுருக்கேல்
Always sell items to the right quantity for the price
தானியங்களை குறைத்து விற்காதே.

உயிர்மெய் வருக்கம்

14 கண்டொன்று சொல்லேல்
Say what you see - Don't exaggerate
கண்ணாற் கண்டதற்கு மாறாக சொல்லாதே

உயிர்மெய் வருக்கம்

15 ஙப் போல் வளை
Keep the bonds around you intact.
ங எனும் எழுத்தைப் போல் அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டும்.

உயிர்மெய் வருக்கம்

16 சனி நீராடு
Prefer washing yourself with gently cold water
குளிர்ந்த நீரில் குளிக்கவும்

உயிர்மெய் வருக்கம்

17 ஞயம்பட உரை
Make others happy while you speak
பிறர் மகிழும்படி பேசு

உயிர்மெய் வருக்கம்

18 இடம்பட வீடு எடேல்
Never build house exceeding your need
உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே

உயிர்மெய் வருக்கம்

19 இணக்கம் அறிந்து இணங்கு
Know if more harmony then befriend.
நற்குண நற்செய்கை உடையவர் என்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்பு செய்

உயிர்மெய் வருக்கம்

20 தந்தை தாய்ப் பேண்
Love and care your parents
உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றி காப்பாற்று

உயிர்மெய் வருக்கம்

21 நன்றி மறவேல்
Always be grateful of the help offered to you
ஒருவர் உனக்கு செய்த உதவியை மறவாதே

உயிர்மெய் வருக்கம்

22 பருவத்தே பயிர் செய்
Never procrastinate without reason.
எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்

உயிர்மெய் வருக்கம்

23 மண் பறித்து உண்ணேல்
Do not occupy others land illegitimately for your livehood
பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே

உயிர்மெய் வருக்கம்

24 இயல்பு அலாதன செய்யேல்
Never indulge in actions that display bad conduct
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே

உயிர்மெய் வருக்கம்

25 அரவம் ஆட்டேல்
Never play with snakes
பாம்புகளை பிடித்து விளையாடாதே

உயிர்மெய் வருக்கம்

26 இலவம் பஞ்சில் துயில்
Sleep on silk cotton bed
இலவம் பஞ்சினாற் செய்த மெத்தையிலே உறங்கு

உயிர்மெய் வருக்கம்

27 வஞ்சகம் பேசேல்
Never speak deceivingly
கபடச் சொற்களை பேசாதே

உயிர்மெய் வருக்கம்

28 அழகு அலாதன செய்யேல்
Never do bad things
இழிவான செயல்களை செய்யாதே

உயிர்மெய் வருக்கம்

29 இளமையில் கல்
Learn while you are young
இளமைப் பருவத்திலேயே படிக்கத் தொடங்கி கல்வியைக் கற்று கொள்

உயிர்மெய் வருக்கம்

30 அறனை மறவேல்
Never forget to do charity
தருமத்தை எப்போதும் மறவாமல் செய்

உயிர்மெய் வருக்கம்

31 அனந்தல் ஆடேல்
Dont sleep for long duration
மிகுதியாகத் துங்காதே

ககர வருக்கம்

32 கடிவது மற
Never hurt someone with your words
யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே

கா
ககர வருக்கம்

33 காப்பது விரதம்
Stand by your vows
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும்

கி
ககர வருக்கம்

34 கிழமைப்பட வாழ்
With your health and wealth, do best to others
உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்

கீ
ககர வருக்கம்

35 கீழ்மை அகற்று
Remove vulgar activities
இழிவான குணஞ் செயல்களை நீக்கு

கு
ககர வருக்கம்

36 குணமது கைவிடேல்
Don't lose character.
நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே

கூ
ககர வருக்கம்

37 கூடிப் பிரியேல்
Do not forsake good friends
நல்லவரோடு நட்பு பாராட்டிய பின் பிரியாதே

கெ
ககர வருக்கம்

38 கெடுப்பது ஓழி
Never do action that may create problem(s) to others
பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே

கே
ககர வருக்கம்

39 கேள்வி முயல்
Listen to good advices/techniques from knowledgable/ experienced person
கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்

கை
ககர வருக்கம்

40 கைவினை கரவேல்
Do not conceal knowledge about handicrafts (art/ making).
உனக்கு தெரிந்த கைத் தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய்

கொ
ககர வருக்கம்

41 கொள்ளை விரும்பேல்
Don't swindle.
கொள்ளை விரும்பாதே

கோ
ககர வருக்கம்

42 கோதாட்டு ஒழி
Leave playing the criminal games
குற்றமான விளையாட்டை விட்டு விடு

கௌ
ககர வருக்கம்

43 கௌவை அகற்று
Remove difficulties in life
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

சகர வருக்கம்

44 சக்கர நெறி நில்
Follow the government rules
அரச ஆணைகளை மதித்து நடக்க வேண்டும்

சா
சகர வருக்கம்

45 சான்றோர் இனத்து இரு
Be with scholars
அறிஞர்களின் குழுவிலே இரு

சி
சகர வருக்கம்

46 சித்திரம் பேசேல்
Never say lie as truth
பொய்யான வார்தைகளை மெய் போல் பேசாதே

சீ
சகர வருக்கம்

47 சீர்மை மறவேல்
Nerver forget the goodness which cause the fame
புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

சு
சகர வருக்கம்

48 சுளிக்கச் சொல்லேல்
Never use the word that hurts others
மற்றவர்கள் முகம் கோணும்படியான சொற்களைக் கூறக்கூடாது

சூ
சகர வருக்கம்

49 சூது விரும்பேல்
Never show interest on gambling
ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே

செ
சகர வருக்கம்

50 செய்வன திருந்தச் செய்
What ever is being done, let it be correct with perfection
செய்யுஞ் செயல்களை திருத்தமாக செய்

சே
சகர வருக்கம்

51 சேரிடம் அறிந்து சேர்
Choose your friends wisely
சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேர வேண்டும்

சை
சகர வருக்கம்

52 சையெனத் திரியேல்
Never be disliked by wise person because of uselessness
பெரியோர் "சீ" என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே

சொ
சகர வருக்கம்

53 சொற் சோர்வு படேல்
Better to remain silent and be thought a fool, than to open your mouth and remove all doubt.
பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே

சோ
சகர வருக்கம்

54 சோம்பித் திரியேல்
Do not be lazy
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே

தகர வருக்கம்

55 தக்கோன் எனத் திரி
Be trustworthy
பெரியோர்கள் உன்னை நல்லவன் என்று புகழும்படி நடந்துக்கொள்

தா
தகர வருக்கம்

56 தானமது விரும்பு
Be kind to the unfortunate
தானம் செய்வதை விரும்பு

தி
தகர வருக்கம்

57 திருமாலுக்கு அடிமை செய்
Serve God (Obey Universe)
திருமாலுக்கு அடிமை செய்

தீ
தகர வருக்கம்

58 தீவினை அகற்று
Do not commit sins
பாவங்களை நீக்கு

து
தகர வருக்கம்

59 துன்பத்திற்கு இடம் கொடேல்
Don't allow sadness to occupy you.
துன்பத்திற்க்கு இடம் கொடுக்காதே.

தூ
தகர வருக்கம்

60 தூக்கி வினை செய்
Analyse, research and then act.
நன்கு ஆராய்ந்து எந்த செயலையும் செய்.

தெ
தகர வருக்கம்

61 தெய்வம் இகழேல்
Don't disregard God
தெய்வம் இகழேல்

தே
தகர வருக்கம்

62 தேசத்தோடு ஒட்டி வாழ்
Adopt to the nation's livelihood (When in Rome, live like Roman's do)
தேசத்தோடு ஒட்டி வாழ்

தை
தகர வருக்கம்

63 தையல் சொல் கேளேல்
Don't believe in girl's words as said.
சிறுமிகள் சொல்லை அப்படியே நம்பாதே.

தொ
தகர வருக்கம்

64 தொன்மை மறவேல்
Don't forget antiquity
தொன்மை மறவேல்

தோ
தகர வருக்கம்

65 தோற்பன தொடரேல்
Know when to give up
தோல்வி உறுதி என்று தெரிந்த பின் தொடராதே.

நகர வருக்கம்

66 நன்மை கடைப்பிடி
Continue to do good deeds
நன்மையான காரியங்களைத் தொடர்ந்து செய்வாயாக

நா
நகர வருக்கம்

67 நாடு ஒப்பன செய்
Let your acts align with what your country approves of
உன்னுடைய நாட்டிலுள்ளோர் ஒத்துக்கொள்ளக் கூடிய காரியங்களையே செய்.

நி
நகர வருக்கம்

68 நிலையில் பிரியேல்
Never compromise on your principles
உன்னுடைய கொள்கைகளில் இருந்து பின்வாங்காதே

நீ
நகர வருக்கம்

69 நீர் விளையாடேல்
Do not play in water (river, lake, dam)
நீர் நிலைகளில் விளையாடாதே.

நு
நகர வருக்கம்

70 நுண்மை நுகரேல்
Do not feed on items that may attract disease/ illness
நோய் தரக்கூடிய (உண்டாக்கக்கூடிய) பொருட்களை உண்ணாதே.

நூ
நகர வருக்கம்

71 நூல் பல கல்
Read books, as many as possible
பல நூல்களை படித்து கற்றுக்கொள்.

நெ
நகர வருக்கம்

72 நெற்பயிர் விளைவு செய்
Harvest paddy grain
நெல் பயிரை விளைச்சல் செய்.

நே
நகர வருக்கம்

73 நேர்பட ஒழுகு
Exhibit good manners always.
தவறான வழியிலேயே செல்லாமல் நேர்மையான வழியிலே நடப்பாயாக

நை
நகர வருக்கம்

74 நைவினை நணுகேல்
Do not do anything that may hurt (self & others)
துன்பம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதே.

நொ
நகர வருக்கம்

75 நொய்ய உரையேல்
Do not use abusive words
இழிவான மொழிகளைப் பேசாதே

நோ
நகர வருக்கம்

76 நோய்க்கு இடம் கொடேல்
Do not attract disease
நோய்க்கு இடம் கொடுக்காதே.

பகர வருக்கம்

77 பழிப்பன பகரேல்
Speak no vulgarity.
பிறர் பழிக்கும்படியான இழிவான சொற்களைக் கூற வேண்டாம்.

பா
பகர வருக்கம்

78 பாம்பொடு பழகேல்
Do not play with snakes
பாம்பை வளர்த்து அதனுடன் பழகாதே

பி
பகர வருக்கம்

79 பிழைபடச் சொல்லேல்
Watch out for self-incrimination.
குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

பீ
பகர வருக்கம்

80 பீடு பெற நில்
Your acts should make others feel proud of you
பெருமையுண்டாகுமாறு நல்வழியிலே நடப்பாயாக

பு
பகர வருக்கம்

81 புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
Try to acknowledge those who appreciate you
உன்னைப் புகழ்ந்தவரை நீயும் போற்றிவாழ்வாயாக

பூ
பகர வருக்கம்

82 பூமி திருத்தி உண்
Cultivate and feed.
விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்

பெ
பகர வருக்கம்

83 பெரியாரைத் துணைக் கொள்
Seek help from the old and wise.
அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்

பே
பகர வருக்கம்

84 பேதைமை அகற்று
Eradicate Ignorance
அறியாமையை போக்கு

பை
பகர வருக்கம்

85 பையலோடு இணங்கேல்
Don't get friendship with idiots.
சிறுபிள்ளைத்தனம் உள்ளவர்களோடு இணங்காதே

பொ
பகர வருக்கம்

86 பொருள்தனைப் போற்றி வாழ்
Protect and enhance your wealth.
பொருள்களை வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்

போ
பகர வருக்கம்

87 போர்த் தொழில் புரியேல்
Don't entertain the fight without use.
வீணாக சண்டை சச்சரவுகளில் தலையிட வேண்டாம்.

மகர வருக்கம்

88 மன‌ம் தடுமாறேல்
Never get disturbed
எதனாலும் மனக்கலக்கம் அடையாதே

மா
மகர வருக்கம்

89 மாற்றானுக்கு இடம் கொடேல்
Never let your enemy to hurt and succeed you
பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே

மி
மகர வருக்கம்

90 மிகைபடச் சொல்லேல்
Never exaggerate things, tell exact facts
உரையாடும் போது எதையும் மிகைப்படுத்திக் கூறாதே, உள்ளதை உள்ளபடிச சொல்

மீ
மகர வருக்கம்

91 மீதூண் விரும்பேல்
Don't prefer eat to excess (than actual need)
மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே

மு
மகர வருக்கம்

92 முனைமுகத்து நில்லேல்
Never be the one who starts a fight
எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே

மூ
மகர வருக்கம்

93 மூர்க்கரோடு இணங்கேல்
Do not have relationship with aggressive people
மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே

மெ
மகர வருக்கம்

94 மெல்லி நல்லாள் தோள்சேர்
Never cheat on your wife
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்

மே
மகர வருக்கம்

95 மேன்மக்கள் சொல் கேள்
Listen to the great legends.
நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட

மை
மகர வருக்கம்

96 மை விழியார் மனை அகல்
Do not have relationship with harlot
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்

மொ
மகர வருக்கம்

97 மொழிவது அற மொழி
Speak with clarity.
சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்

மோ
மகர வருக்கம்

98 மோகத்தை முனி
Gain control over your urges.
காம ஆசைகளை விட்டொழிப்பாயாக

வகர வருக்கம்

99 வல்லமை பேசேல்
Never praise your talents
உன்னுடைய திறமையை நீயே புகழ்ந்து கொள்ளக் கூடாது.

வா
வகர வருக்கம்

100 வாது முற்கூறேல்
Never be the reason for argument
வலியச் சென்று யாரையும் விவாதங்களுக்குக் கூப்பிடக் கூடாது.

வி
வகர வருக்கம்

101 வித்தை விரும்பு
Show interest and acquire skills.
கலைகளை ஆசையோடு கற்றுக் கொள்.

வீ
வகர வருக்கம்

102 வீடு பெற நில்
Practice righteous deeds to attain divinity
முக்திக்கான வழியை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

வு
வகர வருக்கம்

103 உத்தமனாய் இரு
Lead the life with good qualities
நற்குணம் உள்ளவனாக வாழ வேண்டும்.

வூ
வகர வருக்கம்

104 ஊருடன் கூடிவாழ்
Live in harmony with neighbors/surroundings at your place
ஊர் மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும்.

வெ
வகர வருக்கம்

105 வெட்டெனப் பேசேல்
Never utter words that would hurt others
யாரிடமும் கடுமையான சொற்களைக் கூறக்கூடாது.

வே
வகர வருக்கம்

106 வேண்டி வினை செயேல்
Never commit a sin deliberately
வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே

வை
வகர வருக்கம்

107 வைகறைத் துயில் எழு
Wake up before sunrise
அதிகாலையில் விழித்து எழுவது சிறப்புடையதாகும்.

வொ
வகர வருக்கம்

108 ஒன்னாரைத் தேறேல்
Do not trust your enemies
பகைவர்களை நம்பாதே

வோ
வகர வருக்கம்

109 ஓரம் சொல்லேல்
Let your argument never be biased.
ஒருதலைப் பட்சமாகக் பேசக் கூடாது.